கட்டங்களில் ஒளிந்திருக்கும் உலகம்!

Q FOR QR CODE

 

ரு மர அலமாரியின் கதவைத் திறந்ததும், புதிய உலகத்துக்குள் நுழையும் ‘நார்நியா’ சினிமா போல, கலைத்துப் போட்ட கருப்பு நிற கட்டங்களில் உலக விஷயங்களை ஒளித்திருப்பதுதான் QR code. குயிக் ரெஸ்பான்ஸ் கோட் (Quick Response Code) என்பதன் சுருக்கமே அது.

ஒரு பொருளின் விலை மற்றும் அந்தப் பொருள் குறித்த சில தகவல்களை உள்ளடக்கிய பார்கோடு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த பார்கோடுகள், ஒரு படத்தின் டீசர் என்றால்... இந்த க்யூஆர் கோடுகள், முழு சினிமா போல.

பார்கோடுகளில் 20 கேரக்டர்கள் மட்டுமே சேமிக்க முடியும். ‘இது போதாதே, என்ன செய்யலாம்?’ என யோசித்த ஒரு ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனம் உருவாக்கியதுதான் இந்த க்யூஆர் கோடு.  1994-ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த டென்சோ வேவ் (Denso Wave) என்பவர் இதைக் கண்டறிந்தார்.

விசிட்டிங் கார்டுகள், பத்திரிகைகள், போஸ்டர்கள் எனப் பல இடங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள்.  நாம் சொல்ல விரும்பும் தகவல்கள், அது குறித்த புகைப்படங்கள், வீடியோ என அனைத்தையும்  க்யூஆர் கோடு ஆக்கிவிட்டால் போதும். அதை ஒரு பிரின்ட் எடுத்து, மொபைலில் ஸ்கேன் செய்து பார்க்க முடியும். மொபைல் நம்பர், வழிகாட்டி மேப்ஸ், புகைப்படங்கள் என எந்த மாதிரியான டேட்டாவையும்  பகிர முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்