எங்கும் மினியன்ஸ் ராஜ்ஜியம்!

M FOR MINION

‘டிஸ்பிகபிள் மீ’ திரைப்படத்தில் அறிமுகமாகி,  தங்கள் சேட்டைகளால் உலக ரசிகர்களைச் சுருட்டி, குண்டுக் கண்களுக்குள் போட்டுக்கொண்டவை மினியன்ஸ் (Minions).

‘தெரியுமே, எங்க ஸ்கூல் பேக், பென் ஸ்டாண்ட், ஸ்கேல், பென்சில் எல்லாப் பொருட்களிலும் மினியன்ஸ் இருக்கு’ என்கிறீர்களா?

‘அதையெல்லாம் தாண்டி நாங்க எங்கேயோ போயாச்சு’ என்கிறார்கள் இந்தச் சேட்டைக்காரக்காரார்கள்.

‘பா பா பனானா’ என்கிற பாடல், பல லட்சம் பேரின் காலர் டியூனாக பட்டையைக் கிளப்புகிறது. Hello என்றால் Bello, Goodbye என்றால் Poopaye, Icecream என்றால் Gelato என மினியன்ஸ் மொழியை ‘minionese’ என்று பெயரிட்டு, தீவிரமாகக் கற்றுக்கொள்கிறார்கள். எங்கெங்கும் எங்க ராஜ்ஜியம் என ஹிட்டடிக்கும் மினியன்ஸ் பொருட்களில் சில...

மினியன் கண்ணாடிகள் (Minion Goggles)

மினியன்ஸ் மூக்குக் கண்ணாடி அணிவதுதான் லேட்டஸ்ட் ஸ்டைல். Goggles என்ற பெயரில் விற்பனையாகும் ஒற்றை கண் மினியன், இரட்டை கண் மினியன் கண்ணாடிகள், கடைகளுக்கு வந்த வேகத்தில் காலியாகிறது.

மினியன் ஸ்கின்ஸ் (Minion skins)

யோசித்துப் பாருங்கள். ஒரு நாளில் எத்தனை முறை செல்போனை எடுத்துப் பார்க்கிறோம்; லேப்டாப்பைத் திறக்கிறோம். அத்தனை முறையும் நமக்கு ஹாய் சொல்கிறது மினியன்ஸ். செல்போன் கவர், லேப்டாப் கவர் ஆகியவற்றில் மிக அதிகம் இடம்பெறுவது இந்த மினியன்ஸ் ஸ்கின்ஸ்.

மினியன் காஸ்டியூம்

சின்னக் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் மினியன் டிரெஸ் இன்று கிடைக்கின்றன. ‘நீங்க மட்டும் போனா எப்படி? உங்க செல்லப் பிராணிகளுக்கும் மினியன்ஸ் காஸ்டியூம் இருக்கு. அதுக்கும் போட்டு கூட்டிட்டுப் போங்க’ என்கிறார்கள். பார்பி பொம்மைகளுக்கும் மினியன் டிரெஸ் வந்தாச்சுன்னா பார்த்துக்கங்க.

மினியன் ஹெட்போன்

நம்ம காது வரைக்கும் கலக்க ஆரம்பிச்சாச்சு மினியன்ஸ். அழகான இசையைக் கேட்டு தலையை ஆட்டும்போது, பல்லைக் காட்டியவாறு மினியன்ஸ் சேர்ந்து ஆடறது கொள்ளை அழகுதான். மினியன்ஸ்  பொருட்களில்  பெரியவர்கள் அதிகம் விரும்புவது இதுதான்.

மினியன் கேக்

பார்த்துப் பார்த்து ரசிச்ச மினியனைச் சுவைக்கவும் ஆரம்பிச்சாச்சு. கப் கேக், பர்த்டே கேக் என எல்லா வகையிலும் மினியன்ஸ் கேக் வந்தாச்சு. மினியன் என்றாலே குட்டி உருவம் என்பதையும் உடைச்சுட்டாங்க. ஆர்டர் கொடுத்தால் போதும். உங்களுக்கு எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமோ, அவ்வளவு உயரத்தில் கேக் செஞ்சு, நீலம் மற்றும் மஞ்சள் க்ரீம் பூசி, பிரமாண்டமான மினியன்ஸை உங்க வீட்டில் கொண்டுவந்து இறக்கிடறாங்க.

மினியன் மேஹைம் ரைடு (Minion mayhem ride)

ஃப்ளோரிடாவின் யுனிவர்சல் ஸ்டூடியோவில் ஆரம்பித்திருக்கிறார்கள், மினியன் மேஹெம் ரைடு. 3D போன்ற ஸ்பெஷல் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு, இதில் ஏறி உட்காரணும். எதிரே இருக்கும் திரையில் தோன்றும் மினியன்ஸ் உலகத்துக்கு நீங்களும் போய்டுவீங்க. மினியன்ஸ் குதிக்கும்போது நீங்க இருக்கும் இருக்கையும் குதிக்கும். தத்ரூபமான காட்சிகளோடு, த்ரில்லிங்கான இந்தப் பயணத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது.

- கோ.இராகவிஜயா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick