சபாஷ் முதல்வர்கள்!

N FOR NUMBER ONE

‘‘நேத்துல இருந்து லேசா காய்ச்சல். பயக் காய்ச்சல்னு நினைச்சுடாதீங்க. ஏன்னா, பெஸ்ட் மார்க் எடுப்பேன்னு நல்லாவே தெரியும். ஆனா, ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் வந்ததும், காலையில் இருந்து வாழ்த்துகளாகக் குவியறதும் சந்தோஷமா இருக்கு. காய்ச்சல், கண்ணுக்குத் தெரியாமல் ஓடிப்போச்சு” எனச் சிரிக்கிறார் பிரேம சுதா.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வில், 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் முதல் இடம் பிடித்த, இரண்டு பேரில் ஒருவர். நாமக்கல் மாவட்டம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியில் படிக்கிறார்.

“எனக்கு சொந்த ஊரு திண்டுக்கல் மாவட்டம், காமாட்சியூர். எங்க அப்பா ஒரு விவசாயி. ஆனால், என் சித்தப்பா ஒரு டாக்டர். அவரை, டாக்டருக்குப் படிக்கவெச்சது எங்க அப்பாதான். அந்த சித்தப்பா, எனக்குப் பாடங்களில் நிறைய உதவி செய்திருக்கிறார். இந்த வெற்றிக்கு அவரும் ஒரு காரணம். மாநில அளவில் முதல் இடத்தில் வருவேன்னு அவர் நம்பினார். அந்த நம்பிக்கையைக் காப்பாத்திட்டேன். சித்தப்பா மாதிரி நானும் டாக்டர் ஆகணும்’’ என மகிழ்ச்சியும் நம்பிக்கையும் மிளிர பேசினார் பிரேம சுதா.

‘‘ஜாலியா படிக்கணும்; ஈஸியா ஜெயிக்கணும் என்பதுதான் என் பாலிஸி. எக்ஸாம் முடிஞ்ச பிறகும், எந்தப் பதற்றமும் இல்லாமல்தான் இருந்தேன்” என ரிலாக்ஸாக சொல்கிறார் சிவக்குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்