தூண்டில் விளையாட்டில் Noun!

‘Grammar’ பகுதிக்கு உரியது.

‘தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாமா?’ என்றதும், மாணவர்கள் புதிய விளையாட்டுக்குத் தயாராகினர். எங்கள் மாணவர்களைக் குதூகலப்படுத்திய அந்த அருமையான ஆங்கிலப் பயிற்சி விளையாட்டை, உங்கள் பள்ளியிலும் செய்து மகிழத் தயாரா?

முதலில், மீன் வடிவ மின்அட்டைகளில் Names, Places, Things, Animals போன்றவற்றின் பெயர்களை எழுதிக்கொள்ளவும். அதன் வாய்ப் பகுதியில் ஜம் க்ளிப் (Paper clip) செருகவும். நீளமான குச்சியில் நூலைக் கட்டி, அதன் ஒரு முனையில் காந்தம் இணைத்து, தூண்டில் போல செய்யவும்.

மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து, அந்தக் குழுக்களுக்கு Names, Places, Things, Animals எனப் பெயரிடவும். மீன் வடிவ மின்அட்டைகளைத் தரையில் பரப்பிவைக்கவும்.

ஆசிரியர் ‘Places’ என்று அழைத்ததும், அந்தக் குழுவில் இருந்து ஒருவர் வந்து, Places எழுதப்பட்ட மீன்களைத் தூண்டிலால் எடுக்க வேண்டும். இவ்வாறு விளையாட்டு முறையில் மதிப்பீடு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்