Man Vs Nature!

‘Man versus Nature’ பாடத்துக்கு உரியது.

“குளத்தில் குப்பையைக் கொட்டலாமா?” எனக் கேட்டேன். வகுப்பு மாணவர்கள்,  ‘‘கொட்டக் கூடாது’’ என ஒரே குரலில் கூறினர். “அப்படிக் கொட்டும்போது மாசுபடுவது நீரா, நிலமா?’’ எனக் கேட்டதும், சிலர் நிலம் என்றும் பலர் நீர் என்றும் கூறினர்.

சுற்றுச்சூழல் மாசுபாடுகள் பற்றியும், அவற்றால் ஏற்படும் தீமைகள் பற்றியும் விளக்கிக் கூறினேன். பழைய புத்தகங்கள், செய்தித்தாள்கள் மூலம் பல்வேறு விதமான மாசுகள் தொடர்பான படங்களைச் சேகரிக்கச் சொன்னேன்.

கரும்பலகையை Air, Water, Land pollution என மூன்று பிரிவுகளாகப் பிரித்தேன்.  சேகரித்த படங்களை ஒரு ட்ரேயில் வைத்து, மேஜை மீது வைத்தேன். ஒவ்வொரு மாணவராக அழைத்து, நான் கூறும் மாசு தொடர்பான படத்தை எடுத்து, கரும்பலகையில் சரியான பிரிவில் ஒட்ட வேண்டும் என்றேன். அதைப் பற்றி தனக்குத் தெரிந்த கருத்தை ஆங்கிலத்தில் கூறவும் சொன்னேன். ஆங்கிலத்தில் பேசத் திணறிய மாணவர்களுக்கு உதவினேன். சுற்றுச்சூழல் பற்றித் தெரிந்துகொள்வதோடு, ஆங்கிலப் பயிற்சியும் பெற்றனர்.

மாணவர்கள், மாசுபடும் பிரிவை சரியாகக் கண்டறிதல், ஆங்கிலத்தில் பேசும் திறன் ஆகியவற்றைக்கொண்டு மதிப்பீடு அளிக்கலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்