வட்டத்தைச் சுற்றினால், இயல் எண்ணைக் கண்டுபிடிக்கலாம்!

‘இயல் எண்கள் முழு எண்கள்’ பகுதிக்கு உரியது.

ன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள், புரியாமல் திகைத்து நின்றனர். வகுப்புக்கு வெளியே மூன்று வட்டங்கள் இருந்தன. ஒரு பெரிய வட்டத்துக்குள் ‘இயல்’ என எழுதிய ஒரு சிறிய வட்டமும், அதேபோல ‘முழு’ என எழுதிய சிறிய வட்டமும் போடப்பட்டிருந்தன. ஆச்சர்யத்தோடு பார்த்த மாணவர்களிடம், ‘‘நீங்கள் இயல் எண்களை அறிந்துகொள்ளும் செயல்பாடு இது’’ என்றதும் உற்சாகமாகத் தயாராகினர்.

1, 2, 3, 4 ஆகிய எண்கள் எழுதப்பட்ட மின்அட்டைகளை மாணவர்களிடம் கொடுத்தேன். ஒரு மாணவரிடம் 0 என எழுதிய அட்டையையும் கொடுத்தேன். மாணவர்கள், பெரிய வட்டத்தில் சுற்ற ஆரம்பித்ததும், ‘இயல் எண்கள்’ என்றேன். அதற்குரிய வட்டத்தில் 1, 2, 3, 4 மாணவர்கள் நின்றார்கள். முழு எண்கள் என்றதும், 0 எண்ணுடன் மற்றவர்கள் நின்றார்கள். இதன் மூலம் 0, 1, 2, 3, 4... என்பது முழு எண்கள் என்று அவர்கள் எளிதில் புரிந்துகொண்டனர்.

முன்னி, தொடரி ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ள 99, 100, 101 ஆகிய எண்கள் எழுதப்பட்ட கிரீடங்களை அணிந்த மாணவர்களைச் சுற்றி வரச்செய்தேன். விசில் ஊதியதும் 100 எண் கிரீடம் அணிந்த மாணவர் நடுவில் நிற்க, வலது பக்கம் (99) முன்னியும், இடது பக்கம் (101) தொடரியும் நின்றார்கள். மாணவர்கள் விரைந்து செயல்படுவதை வைத்து மதிப்பீடு வழங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்