சொட்டு நீர்ப் பாசனம்!

‘தாவரங்கள், விலங்குகளின் உணவூட்டம்’ பாடத்துக்கு உரியது.

சொட்டு நீர்ப் பாசனம் பற்றிப் பாடத்தில் படித்ததை ஓர் எளிய சோதனை மூலம் மாணவர்களைச் செய்யவைக்கலாம். மாணவர்கள், ஆசிரியரின் உதவியுடன் இதைச் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்: பிளாஸ்டிக் பாட்டில், கத்தி, ஊசி, தண்ணீர், தொட்டித் தாவரம்.

செய்முறை:

பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியை கத்தியால் அறுக்கவும். மூடியில் சிறு துளையிடவும்.

பாட்டிலைத் தலைகீழாக வைத்து, தண்ணீரால் நிரப்பவும்.

மூடியில் உள்ள துளையின் வழியாக நீர், சொட்டுச்சொட்டாக வெளியேறும்.

தொட்டியில் வைக்கப்பட்ட செடிக்கு அருகே, பாட்டிலின் மூடி உள்ள பகுதி மண்ணுக்குள் இருக்குமாறு செருகவும்.

இப்போது, தொடர்ச்சியாக செடிக்கு நீர் கிடைக்கும். தண்ணீரும் வீணாகாது. நாம் சில நாட்கள் வெளியூர் செல்லும்போது, இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள் சோதனையைச் செய்யும் விதம், அதை மற்ற மாணவர்களுக்கு விளக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்