கணங்களை எழுதும் முறை அறிவோம்!

‘கணங்கள்’ பாடத்துக்கு உரியது.

‘வென்’ படத்தைப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட கணங்களை விவரித்தல் முறை, கணக் கட்டமைப்பு முறை மற்றும் பட்டியல் முறையில் குறிப்பிட வேண்டும் என்பது கணச் செயல்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு செயல்பாடு.

A என்ற வட்டத்தில் உள்ள எண்கள் 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ஆகும். இவை, அனைத்துமே பகா எண்கள். அதுவும் 20 எண்ணைவிட குறைவான பகா எண்கள். இப்படி விவரிப்பதே, விவரித்தல் முறை என விளக்கிட வேண்டும்.

விவரித்தல் முறை: A என்பது 20 எண்ணைவிட குறைவான பகா எண்களின் கணம்.

பட்டியல் முறை: A = {2, 3, 5, 7, 11, 13, 17, 19}

அடுத்து, ஒரு கணத்தை, கணக் கட்டமைப்பு முறையில் எப்படி எழுதுவது என்பதை கீழ்க்கண்டவாறு எழுத்திக் காண்பித்து, அது போல மற்றவற்றை மாணவர்களே எழுதிட உதவலாம்.

கணக் கட்டமைப்பு முறை: A= {x:x என்பது ஒரு பகா எண் x < 20 }

இதுபோல மற்ற கணங்களுக்கான செயல்பாடுகளைச் செய்யவைத்து மதிப்பிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்