மூன்று மந்திரங்கள்!

ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

காடு மலை எல்லாம் கடந்து வந்ததில், வெயில் கொடுமை தாங்க முடியாமல் தவித்தது அந்த நரி. மரங்கள் காய்ந்து பட்டுப்போயிருந்தன. தண்ணீர் இருந்த குட்டைகள் வறண்டு இருந்தன.

‘கடவுளே வெயில் கொடுமை தாங்க முடியலையே. இந்த நேரத்துல, குகையைவிட்டு வந்தது தப்பு. தண்ணியாவது குடிக்கலாம்னு பார்த்தா, ஏரி, குளம் எல்லாம் வத்திப்போயிருக்கு. கடவுளே காப்பாத்து’ என்று புலம்பியவாறு சுருண்டு விழுந்துவிட்டது.

நரியின் அபயக்குரலைக் கேட்ட வன தேவதை, அங்கே வந்தது. ‘‘நரியே, உனக்கு மூன்று மந்திரங்களைச் சொல்லித் தருகிறேன். ஒவ்வொரு மந்திரத்தையும் ஒருமுறைதான் பயன்படுத்த முடியும். ஆகவே, நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்து. கெட்ட எண்ணத்தோடு உச்சரித்தால், மந்திரம் பலிக்காது’ என்று நரியின் காதில் மந்திர வார்த்தைகளைக் கூறிவிட்டு மறைந்தது.

‘கனவோ, நனவோ... சோதித்துப் பார்ப்போம். குடிக்கத் தண்ணீர் வேண்டும்’ என்று முதல் மந்திரத்தை உச்சரித்தது.

உடனே, அருகில் புதிதாக ஒரு குட்டை உருவாகி, தண்ணீர் நிரம்பியது. ஆச்சர்யம் அடைந்த நரி, தேவதை வந்தது உண்மைதான் எனச் சந்தோஷப்பட்டது. குட்டை நீரை வயிறு நிரம்பக் குடித்தது. தாகம் தணிந்ததும்  ஓய்வெடுக்க விரும்பியது. ‘காய்ந்து போயிருக்கும் மரங்கள் பசுமையாக மாறினால், நிழலும் குளிர்ச்சியும் கிடைக்கும்’ என்று இரண்டாவது மந்திரத்தைக் கூறியது.

அடுத்த நொடி, காடெங்கும் பசுமையான மரங்கள் தலையசைத்து காற்றை வீசின. தான் நினைப்பது உடனே செயல்வடிவம் பெறுவதை எண்ணி, நரிக்கு பூரிப்பு. மரத்தடியில் ஹாயாகப் படுத்து ஓய்வெடுத்தது. அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு யானைகள் பேசிக்கொள்வதை, கண்களை மூடிக் கேட்டது நரி.

‘‘ரொம்பவே ஆச்சர்யமா இருக்குது. காலையில் காய்ஞ்சு கிடந்த ஏரி, குட்டை எல்லாம் நிரம்பி இருக்கு. மரங்களும் பசுமையா இருக்கு. இந்த அதிசயத்தை சிங்க ராஜாவிடம் சொல்லணும்’’ என்றவாறு சென்றன.

‘இதுக்கெல்லாம் காரணம் நான்தான்னு சொன்னா நம்பவா போறானுங்க. ‘நரிப் பயலே, ஏமாத்துறியா’னு தும்பிக்கையை உயர்த்துவாங்க. பெருமை வேணாம்டா கைப்புள்ள. அடக்கமா இரு. உன் சாதனையை ஒரு நாள் சரித்திரம் பேசும்’ என மனதுக்குள் கூறிக்கொண்டது.

சிறிது நேரம் கழிந்த நிலையில், காலில் ‘சுருக்’ என வலி. தன்னைக் கடித்தது யார் எனப் பார்த்தது நரி. கட்டெறும்புத் தலைவன் முன் நிற்க, அதன் பின்னால் எறும்புப் படைகள் நின்றுகொண்டிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்