இது நம்ம ஏரியா!

‘உள்ளாட்சி’ பாடத்துக்கு உரியது.

நாம் வசிக்கும் பகுதியைத் தெரிந்துகொள்ள, குழுச் செயல்பாடு ஒன்றைச் செய்யவைக்கலாம்.

மாணவர்களை குழுக்களாகப் பிரிக்கவும். ஒரு குழுவை கிராமப்புற உள்ளாட்சி எனவும், மற்றொரு குழுவை நகர்ப்புற உள்ளாட்சி எனவும் பிரிக்கவும். கிராமப்புற உள்ளாட்சிக் குழு மாணவர்களிடம், கிராமிய ஊராட்சி, கிராம உள்ளாட்சி, ஊராட்சி ஒன்றியம் என எழுதப்பட்ட அட்டைகளைக் கொடுக்கவும். அடுத்த குழுவிடம், நகர்ப்புற உள்ளாட்சிப் பிரிவுகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எழுதப்பட்ட அட்டைகளைக் கொடுக்கவும்.

மூன்றாவது குழுவிடம், உள்ளாட்சி அமைப்பை நிறுவியவர் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பணிகள், ஊர்மன்றக் கூட்டம் நடைபெறும் நாட்கள், நகராட்சிப் பதிவுகள், நகராட்சிப் பணிகள் உள்ளிட்டவை எழுதிய அட்டைகளைக் கொடுக்கவும். (உதாரணம்: மாநகராட்சி என்றால், பல லட்சம் மக்கள்தொகைகொண்ட பகுதி. அதன் தலைவர், ‘மேயர்’ என்று அழைக்கப்படுகிறார்).

முதல் இரண்டு குழுக்களில் இருக்கும் மாணவர்கள், தங்களுக்கு உரிய பதவி, பணிகள் எழுதிய அட்டைகளை மூன்றாவது குழுவிடம் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்