இது எங்கள் இசை!

பறை... உறுமி... உடுக்கை...

றை, உறுமி, தவில், உடுக்கை, பம்பை, கடம் என அந்தப் பள்ளி வளாகமே பாரம்பரிய இசைக்கருவிகளின் சங்கமமாக மாறியிருந்தது. ‘பாரம்பரிய இசைக்கருவிகள் அறிவோம்’ என இங்கே நடைபெற்ற கண்காட்சியில், ஒவ்வொரு கருவியின் சிறப்புகளைச் சொல்லி, மாணவர்களே வாசித்துக்காட்டினார்கள்.

சேலம் மாவட்டம், எடப்பாடி மொரசப்பட்டியில் உள்ளது, அமலா கல்வி நிறுவனங்களின் செம்பார்க் பப்ளிக் பள்ளி. இந்தப் பள்ளியின் முதல்வர் சினிதாமஸ், ‘‘இன்றைய மாணவர்களில் பலரும் மியூஸிக் கிளாஸ் செல்வது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், இவர்கள் அனைவருமே கீபோர்டு, கிட்டார் என மாடர்ன் இசைக்கருவிகளிலேயே இசையைக் கற்கிறார்கள். நமது பாரம்பரிய இசைக்கருவிகள் எவ்வளவோ உள்ளன. அவற்றின் பெருமைகளை அறிய வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார்.

‘‘துயர நிகழ்ச்சிகளில் மட்டும்தான் பறையை வாசிப்பாங்க என நினைச்சுட்டு இருந்தேன். அதன் தோற்றம், சிறப்புகளைத் தெரிஞ்சுக்கிட்டதும் உடனே வாசிக்கக் கத்துக்கிட்டேன். அவ்வளவு எனர்ஜியா இருந்துச்சு’’ என்றார் ஒரு மாணவர்.

‘‘நம் தமிழர்கள் இத்தனை விதமான இசைக்கருவிகளை உருவாக்கி இருப்பதை நினைக்கும்போதே ஆச்சர்யமா இருக்கு. இந்த நிகழ்ச்சிக்காக பறையாட்டம், தப்பாட்டம் எல்லாம் கத்துக்கிட்டோம். அழிந்துவரும் பாரம்பரிய கலைகளைப் பற்றி பாடமாகப் படிப்பதைவிட, இப்படி கருவிகளைத் தொட்டு, வாசிச்சுப் பார்த்ததை மறக்கவே மாட்டோம். எங்களுக்கு இது புது எக்ஸ்பீரியன்ஸ்” என்கிறார்கள் மகிழ்ச்சியாக.

- ச.ஆனந்தப்பிரியா, படங்கள்: க.தனசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick