புதிர்ச் செயல்பாடு!

‘புதிர்களை அறிவோம்’ பகுதிக்கு உரியது.

‘புதிர்கள் அறிவோம்’ பகுதிக்கு சூப்பரான செயல்பாடு ஒன்றைச் செய்யவைத்தேன். மாணவர்கள், நூலகத்தில் இருந்த சுட்டி விகடன் உள்ளிட்ட சிறுவர் இதழ்களின் பழைய பிரதிகளைச் சேகரித்தார்கள். அவற்றில் இருந்த புதிர்ப் பக்கங்களைக் கத்தரித்து, ஒரு சார்ட்டில் ஒட்டினார்கள். பிறகு, அவர்களை குழுக்களாகப்  பிரித்து, ஐந்து நிமிடங்களில் புதிர்களுக்கு விடைகளைக் கண்டுபிடிக்கச் சொன்னேன்.

‘‘ஐந்து நிமிடங்கள் எதுக்கு டீச்சர்? இரண்டே  நிமிடங்களில் கண்டுபிடித்துவிடுவோம்’’ என போட்டிபோட்டு செயலில் இறங்கினார்கள். சொன்னதைப் போலவே செய்து முடித்தனர்.  அதேபோல, பழமொழிகளை விளக்கும் ஓவியங்களை வரையும் செயல்பாட்டையும் அளித்தேன். அவற்றை நன்கு புரிந்துகொண்டு, பழமொழிகளுக்கு ஏற்ற ஓவியங்களை வரைந்து அசத்தினார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்