சின்னக் கோடு பெரிய கோடு!

‘குழந்தையின் இயல்பு’ பாடத்துக்கு உரியது.

பீர்பாலைத் தெரியும்தானே? தெனாலி ராமன்  போல, சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் கெட்டிக்காரர். எங்கள் வகுப்பில், பீர்பால் கதையை நாடகமாக நடித்துக்காட்டினர்.

இடம்: அரசவை, பங்குபெறுவோர்: அக்பர், பீர்பால் மற்றும் சில அமைச்சர்கள்.

அரசர் திடீரென எழுந்து, தரையில் ஒரு கோடு கிழித்தார்.

அரசர்: ‘‘இந்தக் கோட்டை அழிக்காமல், இதைச் சிறியதாக்க முடியுமா?’’

அமைச்சர்கள்: ‘‘பேரரசே, கோட்டை அழிக்காமல் யாராலும் சிறியதாக்க முடியாது.’’

பீர்பால்: (கோட்டின் அருகில் அதைவிட நீளமான ஒரு கோடு வரைந்துவிட்டு)  ‘‘மகாராஜா, நான் வரைந்த பெரிய கோட்டின் அருகே, நீங்கள் வரைந்த கோடு சிறியதாக ஆகிவிட்டது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்