Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்கூல் ஸ்பெஷல்!

ங்கள் பள்ளியில் பசுமைப் படை அமைத்து,  செடிகளை நட்டு மரங்களை வளர்க்கிறோம்.  பள்ளியின் சாரணர் படை மூலம் பல்வேறு சமூக விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.

மாணவ, மாணவிகளின் கலைத்திறன் மற்றும் கற்பனைத்திறனுக்கு எங்கள் பள்ளியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காகிதங்களில் பல்வேறு உருவங்களை உருவாக்குவது, பலூனில் படம் வரைவது, வரைபடங்கள் மூலம் பல்வேறு செயல்திட்டங்களை நடத்துவது, பனை ஓலைகளில் எழுதுவது என தினந்தோறும் எங்கள் கற்பனைக் குதிரையை பள்ளி முழுக்க ஓட்டிச் செல்வோம்.

காய்கறிகளில் குட்டிக்குட்டியாக உருவங்களை உருவாக்கும் கார்விங் ராஜாக்கள் எங்கள் பள்ளியில் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதில், ஆக்கில் ரகுமான், முகேஷ் கண்ணா, சிவப்ரியன் ஆகியோர் ராஜாதி ராஜாக்கள். பேப்பரில் சின்னச்சின்ன ஸ்பைடர்மேன், அயர்மேன் என சூப்பர் ஹீரோக்களை உருவாக்குவார் அரவிந்த். 

தேசிய அறிவியல் தினத்தில் நடத்தப் பட்ட அறிவியல் கண்காட்சியில், எங்கள் பள்ளி மாணவர்கள் பல மாதிரிகளைச் செய்து  அசத்தினார் கள். சோலார் கார், ரிமோட் ஹெலி காப்டர், பூமியின் உட்பகுதியின் மாதிரியும் இயக்கமும், கலைடாஸ்கோப், சூரிய அடுப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

எங்கள் பள்ளியின் செல்லக்குட்டி, பொன் ஆதித்யா. ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்களே, அப்படி, ஒன்றாம் வகுப்பு படிக்கும் இந்தச் சுட்டி,  பேச்சுப் போட்டிகளில் கெட்டி. அழகுத் தமிழில் பேசி எல்லோரையும் போடுவார் கட்டி.

NIIT நிறுவனம் நடத்திய விஸ்வநாதன் ஆனந்த் உடன் செஸ் விளையாடும் போட்டியில், எங்கள் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன் சக்தி பங்குபெற்றார். அந்தப் போட்டியில், நூற்றுக்கணக்கானோருடன் விளையாடிய ஆனந்த், ‘‘சக்தி உள்ளிட்ட சில மாணவர்களுடன் விளையாடியபோது சவாலாக இருந்தது’’ எனப் பாராட்டினார். அந்தப் போட்டியில், தனது திறமையால் பள்ளிக்குப் பரிசு பெற்றுத் தந்தார் சக்தி.

எங்கள் பள்ளியின் இசைப் புயல், ஏழாம் வகுப்பு படிக்கும் சுமன். கீ போர்டு வாசிப்பதில் கில்லி. பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் அட்டகாசமாக வாசித்து, தனது இசையால் அனைவரையும் கட்டிப்போடுவார்.

யோகா வகுப்புக்கு எங்கள் பள்ளியில் தனிச் சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாணவரும் யோகாவில் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பல விளையாட்டுகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அசத்துகிறார்கள். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஜாலி உலகம் ஜூட்டோபியா!
ஒளியே... ஒளியே!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close