டாப் 10 ஆப்ஸ் 10

- இனியன்

ஸ்னோவைட், ஹேன்சல் க்ரெட்டல் என்று எத்தனை தேவதைக் கதைகளைப் படித்திருக்கிறோம். Princess Fairy Tale Maker என்கிற ஆப் மூலம், நாமே அத்தகைய கதைகளை உருவாக்கலாம். கொடுத்திருக்கும் தேவதைகள், இடங்களின் ஓவியங்களுக்கு ஏற்ப, க்யூட்டான கதைகளை உருவாக்கி, தேவதைகளை உலவ விடுங்கள். http://bit.ly/chuttifairytale

நிறைய செல்ஃபி போட்டோக்களை  எடுத்து இருக்கீங்களா, அந்த போட்டோக்களை அழகுபடுத்தியும், குறும்பான கற்பனைத்திறன் மூலமும் மாற்றி, ஆல்பமாக ஸ்டோர் பண்ணி எல்லோரிடமும் காண்பித்து அசத்தலாம்.  அதற்கான ஆப், Funfoto-Funny Photo Editor.  செல்ஃபி எடுங்க, ஜாலியா மாற்றுங்க. http://bit.ly/chuttifunfoto

சில நரம்பியல் விஞ்ஞானிகளின் உதவியோடு மூளையைச் சுறுசுறுப்பாக்க உதவும் 30 விளையாட்டுகள் உள்ள ஆப், Peak - Brain Games. வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது, முக்கோணம், சதுரம் போன்ற துண்டுகள் மூலம் உருவங்களை உருவாக்குவது என உங்களுக்கு ஏற்ற விளையாட்டுகள்  குவிந்துள்ளன. http://bit.ly/chuttipeak

ட்சத்திரங்களை எண்ணிவிட முடியுமா? ஆனால் இந்த Star Gurus ஆப், உங்களுக்கு வானத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு எண்களை இட்டுக் காட்டும். அந்த எண்கள் உள்ள நட்சத்திரங்களின் மேல் விரலை வைத்து கோடு வரைந்துகொண்டே போனால் ஆச்சர்யம் காத்திருக்கும். அதை நீங்களே பாருங்கள். http://bit.ly/chuttistargurus

ந்த ஆண்டு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற ‘இன்சைடு அவுட்’ திரைப்படத்தை மையமாக வைத்து இந்த Inside Out Thought Bubbles விளையாட்டு உருவாக்கப்பட்டு உள்ளது. திரைப்படத்தில் எப்படி நம்முடைய அழுகை, பயம், கோபம் போன்றவை காட்டப்பட்டதோ, அதே போல இந்த விளையாட்டும் இருக்கிறது. http://bit.ly/chuttiinside

ங்களுக்கு பல் டாக்டராக ஆசையா? உடனே Libii Dentist ஆப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். உங்களுடைய மருத்துவமனையை அழகுபடுத்திவிட்டுக் காத்திருந்தால், உங்களைத் தேடி நோயாளிகள் வருவார்கள். அவர்கள் பற்களின் நோயைக் கண்டுபிடித்துச் சரிசெய்யலாம். உங்கள் பற்களையும்  அழகுபடுத்தலாம். http://bit.ly/chuttidentist

தியானம் மனதை அமைதியாக்கி, ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆனால், தியானம் செய்ய முடியவில்லை என்பவர்களுக்கான ஆப், Stop, Breathe & Think. தியானம் செய்ய முடிவெடுத்ததும்  உங்களுடைய இப்போதைய மனநிலையைக் கேட்கும். சோகமாக இருப்பதாகச் சொன்னால், அதற்கேற்ற தியானம் செய்யும் முறையை உங்களுக்குக் காட்டும். மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கேற்ற தியானம் செய்யும் முறையைக் காட்டும். http://bit.ly/chuttiyoga

ங்களுக்கு கிட்டார், பியானோ கற்றுக்கொள்ள ஆசை இருக்கிறதா? Yousician Learn Piano & Guitar ஆப் பயன்படுத்துங்கள். ஒரு சிறந்த இசை ஆசிரியர் போல, நீங்கள் கற்றுக்கொள்ளும் வேகத்துக்கும் செய்யும் தவறுகளுக்கும் ஏற்ற ஆலோசனைகளை இந்த ஆப் தரும். http://bit.ly/chuttiyousician

டிவேலுவுக்கு கிணறு காணாமல்போன மாதிரி ஒரு சுட்டிக்கு நிலா காணாமப்போயிடுச்சு. எதையும் துப்பு துலக்கி ஆராயும் அந்தச் சுட்டி, காணாமல் போன நிலாவைத் தேடிக் கண்டுபிடிக்கக் கிளம்புகிறார்.காட்டில் இருக்கும் விலங்குகளை விசாரிக்கிறார். அட்டகாசமான ஓவியங்கள், ஒலிகள் என இந்தக் கதையை நீங்கள் Who stole the moon? ஆப்பில் அனுபவிக்கலாம். http://bit.ly/chuttimoonstolen

பூக்கள் அழகானவை. ஆனால், அதை அழகாக வரைகிறேன் பேர்வழி எனச்  சொதப்பிவிடுவோம். அப்படியானால் How to Draw Flowers? என்ற ஆப் உங்களுக்கு உதவ வருகிறது. விதவிதமான பூக்களை வரைய எத்தனை ஸ்டெப்ஸ் தேவைப்படும் என்று சொல்லி, அதிலிருந்து ஒவ்வொன்றாக வரைய நீங்கள் கற்றுக்கொள்ளலாம். http://bit.ly/chuttidrawflower

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick