தேசிய கீதம் தந்த தாகூர்!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

மது நாட்டின் தேசிய கீதத்தை எழுதியவர், இலக்கியத்தில் மாமேதையாகத் திகழ்ந்த ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி சில துளிகள்... 

1861-ம் ஆண்டு மே 7-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர்.

காந்தியை முதன்முதலாக ‘மகாத்மா’ என்று அழைத்தவர்.

ஆசியாவிலேயே, முதன்முதலில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்.

சட்டம் படிக்க, இங்கிலாந்து சென்றவர். ஆனால், கவிதைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே வங்கத்துக்குத் திரும்பியவர்.

1919-ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் அவருக்கு வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.

சாந்தி நிகேதன்  பள்ளியைத் தொடங்கி, குழந்தைகளின் தனித்திறன்களை வெளிக்கொண்டுவந்தார். அவரின் நோபல் பரிசு  நிதி முழுவதையும் சாந்தி நிகேதன்  வளர்ச்சிக்கே  பயன்படுத்தினார். கட்டணமில்லா இலவசக் கல்வியை வழங்கினார்.

பிரபல வங்கத் திரைக்கலைஞர் சத்யஜித் ரே, சாந்தி நிகேதனில் படித்தவர்தான்.

60 வயதில் ஓவியம் வரையத் தொடங்கி, ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்தவர்.

இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்ணியம் காத்தல், தீண்டாமை எனும் இழிவை நீக்குதல், மதச் சார்பின்மை, அறிவியல் வளர்ச்சி, மனித நேயத்தைப் பேணிக் காத்தல் ஆகியவை தாகூரின் சிந்தனைகள்.

3,000-க்கும் மேற்பட்ட கவிதைகள், 2,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், 50 நாடகங்கள், 40-க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகள், சிறுகதைகள் எனப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறார்.

1940-ம் ஆண்டு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,   இவரது   சாந்தி நிகேதனுக்கே வந்து ‘டாக்டர் ஆஃப் லிட்ரேச்சர்’ என்ற விருதினை வழங்கியது.

‘அமர் சோனார் பங்களா’ எனத் தொடங்கும்  இவர் எழுதிய பாடலே, வங்காள தேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதியவர் என்ற பெருமைக்கு உரியவர்.

அண்டை நாடான இலங்கையின் தேசிய கீதத்தை எழுதிய ஆனந்த சமரக்கோனுக்கு, தாகூரின் பாடல்கள்தான் உத்வேகம் அளித்தன.

‘குருதேவ்’ என்று  பலராலும் அழைக்கப்பட்டவ ரவீந்திரநாத் தாகூர், 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 -ம் தேதி காலமானார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்