ஃபேஸ்புக் நாயகன்

மார்க் ஸூக்கர்பெர்க் பிறந்ததினம் மே 14

நீல நிறத்தைப் பார்த்தாலே சிலருக்கு ஃபேஸ்புக்தான் நினைவுக்கு வரும். ஃபேஸ்புக் நாயகன் மார்க் ஸூக்கர்பெர்க் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா?

மே 14, 1984-ல் பிறந்த மார்க் ஸூக்கர்பெர்க்கின் தந்தை எட்வர்ட் ஸூக்கர்பெர்க், பல் மருத்துவர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வரிசைப்படி சிகிச்சைக்கு அழைக்க, மென்பொருள் ஒன்றை உருவாக்கியபோது அவருக்கு வயது 12.

பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்னரே, ‘மெர்ஸி’ கல்லூரியில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்துவிட்டார்.

2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கை நண்பர்களோடு தொடங்கினார். சிவப்பு, பச்சை நிறங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாத குறைபாடு இவருக்கு உள்ளது. அதனால்தான், ஃபேஸ்புக்கை முழுவதுமாக நீல நிறத்தில் உருவாக்கினார்.

23 வயதிலேயே, ‘உலகின் மிக இளைய பில்லியனர்’ என்ற பெருமை பெற்றார்.

கிரே கலர் டி-ஷர்ட்டே இவரது சீருடை போல ஆகிவிட்டது. ஏன் தினமும் ஒரே நிற உடை என்று கேட்டால், ‘தினமும் காலையில் என்ன உடை அணிவது என்று யோசிக்கிற நேரம் மிச்சம்’ என்கிறார்.

ஃபேஸ்புக்கில், மார்க்கின் அக்கௌன்ட்டை யாராலும் பிளாக் செய்ய முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்