சேட்டைக்கார பாண்டா!

வாவ்! ‘குங்ஃபூ’ படம் பார்த்த பிறகு சுட்டீஸ்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான். பாண்டாக்கள், பார்ப்பதற்கு கறுப்பும் வெள்ளையுமாக, ரொம்ப க்யூட்டா, அமைதியான சாதுபோல இருக்கின்றன அல்லவா? ஆனால், பாண்டாக்கள் பயங்கர சேட்டைக்காரர்கள்.

சீன நாட்டின் பெருமைகளில் ஒன்று பாண்டா கரடி. கரடி இனத்தின் ஒரு பிரிவுதான், பாண்டா கரடி. பாண்டா பிறக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். வளர வளர கறுப்பு, வெள்ளை நிறமாக மாறிவிடும்.

பாண்டாக்களுக்கு சாப்பாட்டிற்கு அடுத்து ரொம்பப் பிடித்தது, தூங்குவது. ஒரு முறை சாப்பிட்டால், இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் வரை தூங்கும். தூங்கி எழுந்து மீண்டும் சாப்பிடும், திரும்பத் தூங்கிவிடும். சாப்பிட்டுச் சாப்பிட்டு டயர்டாகிவிடும்போல. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வனவிலங்குகள் சரணாலயத்தில் பாண்டாக்கள் வளர்க்கப்படுகின்றன. பாண்டாக்களின் ஆயுட்காலம் 14-20 ஆண்டுகள்.

பாண்டா பாதுகாக்கப்படவேண்டிய உயிரினமாகக் (Conservation status) கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து கேட்பவர்களுக்கு, பாண்டா கரடியை 6,00,000 டாலர் வரைக்கும் விற்கிறது சீனா. இந்தப் பணத்தை, காடுகளில் அழிந்துவரும் பாண்டாக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த சம்மர் லீவில், பாண்டாக்கள் போல சேட்டைகள் செய்து மகிழ்ந்திருப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்