அசத்த வருகிறது ஆங்ரி பேர்ட்ஸ்!

“ஆங்ரி பேர்ட்ஸை மீட் பண்ணலாமா?”

இப்படி உங்களைக் கேட்டால் என்ன செய்வீர்கள்? இதோ, நான் ரெடினு கிளம்பிடுவீர்கள்தானே. அந்த அளவுக்கு ஆங்ரி பேர்ட்ஸ் கேம் பிடிக்கும். இந்த கேமை நாம் விளையாடும்போது, பக்கத்தில் தௌசண்ட் வாலா சரவெடி வெடித்தாலும் காதில் கேட்காது. ஒவ்வொரு ஆங்ரி பேர்டாகப் பறக்கவிட்டு, எதிரே இருக்கும் கட்டடங்களை உடைத்து, அதில் இருக்கும் ‘கிரீன் பிக்’குகளைத் தெறிக்கவிடுவோம்.

‘ஆங்ரி பேர்ட்ஸ்’ திரைப்படம், மே 27-ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது. இந்தப்  படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த சென்னைச் சுட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி. ஆங்ரி பேர்ட்ஸில் செம  கோபமான ரெட், யெல்லோ பறவையான ‘சக்’ மற்றும் கறுப்பு நிற ‘பாம்’ ஆகிய மூன்று பறவைகள் வேடமிட்டவர்கள், சுட்டிகளைச் சந்தித்து, பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி உற்சாகப்படுத்திவிட்டனர்.

இந்தப் படத்தை சுட்டிகளிடம் பிரபலப் படுத்துவதற்காக ஆங்ரி பேர்ட்ஸ் குழு இந்தியாவின்  சில நகரங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர். அதில் முதல் சாய்ஸ் சென்னை. அடுத்து பெங்களூரு, ஹைதராபாத்துக்குப் பறந்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்