ஸ்கில் தந்த நாசா பயணம்!

"நான், நாசாவுக்குப் போகப்போறேன்னு அம்மாகிட்ட சொன்னதும், அவங்களால நம்பவே முடியல... அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். அம்மாவும் அப்பாவும் என்னை பிரணவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.  அடுத்த மாதம் அமெரிக்காவில் இருக்கிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுக்குச் செல்கிறார் பிரணவ். அங்கே, ராக்கெட்டுகளையும் செயற்கைக்்கோள்களையும் நேரில் சுற்றிப்பார்க்கப் போகிறார். நாசா விஞ்ஞானிகளோடு நேரடியாகப் பேசப்போகிறார்.

பிரணவுக்கு எப்படிக் கிடைத்தது இந்த வாய்ப்பு?

நம்ம சுட்டி விகடனும் ஸ்கில் ஏஞ்சல்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய `சூப்பர் பிரெய்ன் போட்டியில்' தன்னுடைய அபாரமான மூளையால் முதல் இடம் பிடித்து வெற்றிபெற்றார் பிரணவ். அதற்குத்தான் இந்த பம்பர் பரிசு.

``கேம்ஸ் வழியாகவே மூளையைக் கூர்மையாக்கிக்க முடியும்னு தெரிஞ்சதும், நாமும் விளையாடிப் பார்ப்போமேன்னு முதலில் விளையாட ஆரம்பிச்சேன். போகப்போக இந்த கேம்ஸ் ரொம்பப் பிடிச்சிருந்தது. எனக்கு பயனுள்ளதாகவும் இருந்தது. ஸ்கில் ஏஞ்சல்ஸ் கொடுத்த டெமோ கேம்ஸை விளையாடி, நிறைய நிறையப் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அதனால்தான் என்னால முதல் இடம் பிடிக்க முடிஞ்சது'' என்று தன்னுடைய வெற்றி ரகசியம் சொல்கிற பிரணவ், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். 

இந்த சூப்பர் பிரெய்ன் போட்டியில், இரண்டாவது இடம் பிடிச்சது, பெங்களூருவில் இருந்து வந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சுட்டி, சித்தார்த் வெங்கட சுப்ரமணியன். இவருக்கு என்ன பரிசு? சிங்கப்பூரில் இருக்கிற யுனிவர்சல் ஸ்டுடியோஸை சுற்றிப்பார்க்கிற வாய்ப்பு.

இந்தியாவின் மிகப் பெரிய இந்த ஆன்லைன் அறிவுத்திறன் போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 6,500 மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க. இவர்களில் வெற்றிபெற்றவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், சைக்கிள், ஐபேட், சயின்ஸ் கேட்ஜெட்ஸ் என எக்கச்சக்கமான பரிசுகளை அள்ளிக்கொண்டார்கள் சுட்டிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்