கதை நாயகி

“நான், நேத்து கதை ஒண்ணு படிச்சேன். அதுல ஜன்னல் வழியே ஒரு பேய் வந்து...” இப்படி உங்கள் ஃப்ரெண்ட்ஸ்கூட நீங்கள் படித்த புத்தகம் பற்றிப் பேசியிருப்பீர்கள். அதெல்லாம் பெரியவர்கள் எழுதிய கதையாக இருக்கும். உங்களை மாதிரியே பள்ளியில் படிக்கும் ஒருவர் கதை எழுதியிருந்தால் எப்படி இருக்கும்.

சென்னை வித்யா மந்திர் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் யாமினி பிரஷாந்த், Uma Not-So-Perfect எனும்  ஆங்கிலக் கதைப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ‘வெரி குட்’ என்று பாராட்டினால், ‘இது என்னோட மூன்றாவது புத்தகம்’ என ஆச்சர்யம் அளிக்கிறார்.   

“ரொம்பக் குட்டி வயசுல முதல் புத்தகம் படிச்சேன். அது, சின்னக் கதைப் புத்தகம். என்ன புத்தகம் என இப்போ ஞாபகத்தில் இல்லை. ஆனா, நல்லா இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்தது. அன்றைக்கு ஆரம்பிச்ச பழக்கம், இப்போ மூன்றாவது புத்தகம் எழுதுற அளவுக்கு என்னை வளர்த்திருக்கு” என்கிறார் யாமினி பிரஷாந்த்.

யாமினியின் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க, யாமினியின் அப்பா பிரஷாந்த் வாசு, சூப்பரான ஐடியா செய்தார். யாமினி படித்த புத்தகங்கள் பற்றிக் கேள்விகள் கேட்பார், அதற்கான பதிலை யாமினி எழுதுவார். இந்த முறையால் புத்தகத்தை நன்கு படிக்கும் பழக்கமும், விமர்சனம் எழுதும் திறனும் கைவந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்