Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிர்களின் கதைகள்!

ந்த இதழ் முழுக்கவே, பக்கத்துக்குப் பக்கம் புதிய புதிய புதிர்கள் உங்களைக் குஷிப்படுத்தக் காத்திருக்கு. அந்தப் புதிர்களில் புகுந்து விளையாடுறதுக்கு முன்னாடி, சில பிரபலமான புதிர்கள் உருவான தகவல்களின் ஜூஸ் இங்கே...

புதிருக்கு ஆங்கிலத்தில் Puzzle என்று பெயர். ‘இதுகூட எங்களுக்குத் தெரியாதா?’னு நீங்க முறைக்கிறது தெரியுது. ஆனா, இந்த Puzzle என்ற வார்த்தை Pusle என்ற வார்த்தையின் அடிப்படையில் உருவானதுனு உங்களுக்குத் தெரியுமா? ஏன் குழப்புறீங்கனு கேட்குறீங்களா? இந்த வார்த்தையோட அர்த்தமே குழப்பம்தான். இன்னும் தெளிவா சொல்லணும்னா, ஒருத்தரோட மனசை ரொம்பக் குழப்பிவிடுறது. இப்போ, Puzzle என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்குக் குழப்பம் இல்லாமத் தெளிவா புரிஞ்சதா?

1913-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளிவந்த ‘நியூயார்க் வேர்ல்ட்’ பத்திரிகையில், ஆர்தர் வைன் (Arthur Wynne) என்பவர், கட்டம் கட்டமாக எதையோ வரைந்து, சில கேள்விகளைக் கேட்டிருந்தார். ‘கேள்விகளுக்கான விடைகளை, அந்தக் கட்டங்களில் எழுதணும்’னு என்றார்.

‘இது என்ன புதுசா இருக்கு? வார்த்தைகளை, மேலேயும் கீழேயும் எழுதச் சொல்றாரே என சிலர் கடுப்பானாங்க.  ஆனால், இந்த வார்த்தை விளையாட்டு பலருக்குப் பிடிச்சது. அதன் பிறகு, உலகம் முழுக்க பல பத்திரிகைகளில் வெவ்வேறு மொழிகளில் வெளியாகி, சூப்பர்  ஹிட் அடிச்சது. அதுதான் குறுக்கெழுத்துப் புதிர் (Crossword).

அதிகபட்சம் 25 கேள்விகள், 100 கட்டங்கள் இருக்கும் குறுக்கெழுத்துப் புதிர்களை எழுதிப்பார்க்கும்போதே பலருக்கு தலைசுத்தி மயக்கம் வந்துடும். பார்த்ததுமே மயக்கம் வரும்  அளவுக்கான மெகா குறுக்கெழுத்துப் புதிர்களும் இருக்கு.  மிகப்பெரிய குறுக்கெழுத்துப் புதிர்னு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற புதிரில் 25,970 குறிப்புகள், 1,32,020 கட்டங்கள் இருந்தன. ஆரா ஹோவ்ஹன்னிஷன் (Ara Hovhannisian) என்பவர்தான் இந்த மெகா குறுக்கெழுத்துப் புதிரை உருவாக்கியவர். புதிர் மாதிரியே இவர் பெயரும் உச்சரிக்கப் புதிரா இருக்குதானே.

ஒரு பலகையில் ஓர் ஓவியத்தை வரைந்து, அதைச் சின்னத் திருகு கத்தி (Jigsaw) பயன்படுத்தி சின்னச்சின்னத் துண்டுகளாக வெட்டிவிட்டு, மீண்டும் ஓவியமாக அமைக்கும் புதிர்களாக ‘ஜான் ஸ்பில்ஸ்பரி’ (John Spilsbury) 1760-ம் ஆண்டு உருவாக்கினார். இந்த வகை ஸிக் ஸாக் புதிர்களும் பிரபலமானதுதான். இப்போது, அட்டை, காகிதம்,  பிளாஸ்டிக் எனப் பல்வேறு  வடிவங்களில், பிரமாண்டமாக வருகிறது, ஸிக் ஸாக். எந்த அளவுக்குப் பிரமாண்டம்? 5,51,232 துண்டுகள்கொண்ட ஸிக் ஸாக்  புதிர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிச்சிருக்கு.

மிகவும் புத்திசாலித்தனமான, கடினமான புதிர் என்ற கெத்தோடு பலருக்கும் சவால் விடுறது, ரூபிக்ஸ் க்யூப். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எர்னோ ரூபிக் (Erno Rubik) என்பவர் கண்டுபிடித்த இந்த ரூபிக்ஸ் க்யூப், உலகம் முழுக்க இதுவரை 35 கோடி விற்பனை ஆகி இருக்காம்.

கடந்த சில ஆண்டுகளாக, புதிர் என்றதும் ‘சுடோகு’தான்  எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு சுடோகு உலகம் முழுக்க பலரையும் சுண்டி இழுத்திருக்கு. செய்தித்தாள்களில் சுடோகுவை தீர்த்துவைக்க பலரும் குனிந்த தலையோடு இருக்காங்க.

சுடோகு என்ற பெயரைக் கேட்டதும், ஜப்பானியச் சொல் என நினைக்கிறீர்கள்தானே? கரெக்ட்! ஜப்பான் மொழியில் ‘சு’ என்றால், எண்கள். ‘டோகு’ என்றால், ‘ஒன்று மட்டும்’ என்று அர்த்தம். அதாவது, ஒரே எண் மட்டுமே வர வேண்டும் என்று அர்த்தம்.

பெயர்தான், ஜப்பான் மொழியில் இருக்கு. ஆனால், இதைக் கண்டுபிடித்தவர், ஹோவர்ட் கார்ன்ஸ் (Howard Garns) என்ற அமெரிக்கர். ஒரு சுடோகு கட்டத்தை அமைக்க பல லட்சம் டிரில்லியன் வழிமுறைகள் இருக்கு. ரொம்பச் சரியா சொல்லணும்னா 6,67,09,03,75,20,21,07,29,36,960 வழிமுறைகள் (எவ்வளவு என நீங்களே கணக்கு போட்டுக்கங்க).

ஒரு சுலபமான சுடோகு புதிரைத் தீர்த்துவைக்க சில நிமிடங்கள் ஆகலாம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்னைடர் (Thomas Snyder) சுலபமான சுடோகு புதிரை 23.93 நொடிகளில் தீர்த்துவைத்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

இந்த இதழில் உள்ள புதிர்களோடு விளையாட ஆர் யூ ரெடி?

- சுப.தமிழினியன், அட்டை, படங்கள்: சூ.நந்தினி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
வரிசை மாறிப் போச்சு!
வெட்டுங்க ஒட்டுங்க!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close