குச்சி ஐஸ் எப்படி காணாமல் போனது?

பருப்பொருள்கள் மற்றும் அதன் தன்மைகள் பாடத்துக்கு உரியது.

குப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, இரு மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். “நேற்று, அம்மா ஐஸ் வாங்கித்தந்தார். மேஜை மீது வைத்துவிட்டு மறதியாகப் பேசிக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் கரைந்துவிட்டது” என்று வருத்தப்பட்டான் ஒரு மாணவன். அதையே மையமாக வைத்து, கரைதல் பற்றி விளக்கினேன். ஒரு பொருளைச் சுற்றி வெப்பநிலை அதிகரிக்கும்போது நிகழும் மாற்றத்தைக் கூறினேன். வகுப்பில் இருந்த மெழுகுவத்தியைக் கொளுத்தி அது உருகுவதைக் கவனிக்கச் செய்தேன். சத்துணவுக் கூடத்துக்கு அழைத்துச்சென்று தின்மப் பொருளை வெப்பப்படுத்தும்போது ஏற்படும் மாற்றத்தை விளக்கினேன். பொருட்களின் மாற்றத்தை நேரடியாக பார்த்து எளிமையாகப் புரிந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick