Tense Game!

Tense பகுதிக்கு உரியது.

மேஜையின் ஒரு புறத்தில், நீண்ட வாக்கியங்கள் எழுதப்பட்ட மின்அட்டைகளை வைக்கவும். மறுபுறத்தில் எதுவும் எழுதாத மின்அட்டைகளை வைக்கவும். மாணவர்களை ஐந்து குழுக்களாக பிரிக்கவும். ஆசிரியர் விசில் ஊதியதும் ஒவ்வொரு குழுவும், வாக்கியம் எழுதப்பட்ட அட்டை ஒன்றும் வெற்று அட்டை இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குழுவும் தங்களுக்கு வந்த அட்டையில் இருக்கும் வாக்கியத்தில் உள்ள இரு செயல்களில், எந்தச் செயல் முதலில் நடந்தது, எது இரண்டாவதாக நடந்தது என்று பிரிக்க வேண்டும். அவற்றை 2 அட்டைகளில், Action 1, Action 2 என எழுத வேண்டும். உதாரணமாக...

வாக்கியம் : I was hungry because I had skipped the breakfast.

Action 1 : I had skipped the breakfast.

Action 2 : I was hungry.

இதுபோல, 10 நிமிடங்களில் எந்தக் குழு அதிகமாகவும் சரியாகவும் வாக்கியங்களைப் பிரித்து எழுதுகிறதோ அந்தக் குழுவுக்கே வெற்றி.

இந்தச் செயல்பாடு மூலம், முதலில் நடந்த செயல் Past Perfect tense ஆகவும், இரண்டாவது நடந்த செயல் Past tense - ஆகவும் எழுதப்படும் எனப் புரியும். ஆசிரியர், மிக கவனமாக வாக்கியங்கள் அடங்கிய அட்டைகளைத் தயார்செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்