பாப்பா ரெடி டோர் டெலிவரி!

- சினிமா விமர்சனம்

ர்டர் கொடுத்தால், குழந்தையை டோர் டெலிவரி செய்யும் பறவைகள் இருந்தால் எப்படி இருக்கும்..? அப்படியான ஜாலி கற்பனையின் உச்சமே, ‘ஸ்டார்க்ஸ்’ (Storks) அனிமேஷன் 3D சினிமாவின் அட்டகாசம்.

கதை என்னென்னா... முன்னொரு காலத்துல,  குழந்தைகளை இயந்திரத்தில் உற்பத்தி செஞ்சு, வீட்டுக்கு டெலிவரி கொடுக்கும் வேலையைச் செய்யும் நாரைகள் இருந்துச்சு. அவங்க கம்பெனியின் பெயர் ‘ஸ்டார்க்ஸ்’.

நாம யாரு? அப்பா, அம்மாவோடு இருக்கும்போதே, சேட்டைப் பண்ணி டிமிக்கி கொடுக்கிறவங்க.  நாரைகள் என்ன பாடுபடும்? டெலிவரி செய்ய தூக்கிட்டுப் போகும்போது, குழந்தைகள் செய்யற சேட்டையில், டென்ஷனான ஸ்டார்க்ஸ் கம்பெனி, இனிமேல்  குழந்தைகளை டெலிவரி செய்யறது இல்லைனு முடிவு செய்யுது. குழந்தைகளைத் தயாரிக்கும் மெஷினையும் ஓரமா போட்டுட்டு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை மட்டும் டெலிவரி செய்யறாங்க.

‘ஸ்டார்க்ஸ்’ கூட்டத்தில் டெலிவரி செய்வதில் கில்லாடி வெள்ளை நாரையான, ஜூனியர் ஸ்டார்க். அங்கே  வேலை செய்யும் ஒரே மனித இனத்தைச் சேர்ந்தவள், ஜூனியரின் தோழியான துலிப். கம்பெனிக்கு வரும் ஒரு லெட்டரில், தங்கச்சி பாப்பா வேணும்னு ஒரு பையன் ஆர்டர் கொடுக்கிறான். அந்த லெட்டரை, அவசரப்பட்டு குழந்தைத் தயாரிப்பு மெஷினில் போடுகிறாள் துலிப்.

அப்புறம் என்ன? படுசுட்டியான ஒரு குழந்தை ரெடி. அந்தக் குழந்தையை, கம்பெனியில் இருக்கும் யாருக்கும் தெரியாமல், ஜூனியர் ஸ்டார்க்கும் துலிப்பும் டெலிவரி செய்ய நினைக்கிறாங்க. மிச்ச கலாட்டாவைப் பத்தி சொல்லணுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்