நிலவோடு பேசலாம்!

சர்வதேச நிலவு நோக்கு இரவு - அக்டோபர் 8 . 2016

ரு நாள் என்பது 6 முதல் 10 மணி நேரமாக இருந்தால் எப்படி இருக்கும்?

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் இருந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ‘நான் யாருக்கும் அடங்காதவன்’ என அசுர வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த பூமி, நிலவின் வருகைக்குப் பிறகுதான் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உருவானது.

பாட்டி வடை சுடும் கதையில் தொடங்கி, கவிதைகள் எழுதுவது, கால் தடம் பதிப்பது என நிலவு என்றென்றும் மனிதருக்கு பேராவலையும் பெரும் ஆச்சர்யத்தையும் அளித்துக்கொண்டே இருக்கிறது. இரவு நேரத்தின் வான் தேவதையான நிலவை நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இன்றைய ஆண்ட்ராய்ட் உலகத்தில், இரவைப் பகலாக்கும் மின்விளக்கு ஒளிகளுக்கு மத்தியில், நிலவை ரசிக்க மறந்துபோகிறோம். ஆனால், நாம் நிலவோடு பேச நிறையவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்