மின்சாரத்தை சேமிப்போம்!

`ஆற்றல் சேமிப்பு’ பாடத்துக்கு உரியது.


முதலில், மின்சாரம் எதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், மின்சாரத்தை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம் என்றும் மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டேன். பிறகு, மின் உற்பத்தி முறைகள் பற்றியும், அதை சேமிக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கினேன். மாணவர்களை சில குழுக்களாகப் பிரித்து, எவ்வாறெல்லாம் மின்சாரத்தை சிக்கனம் செய்யலாம் என ஓவியம் ஒன்று வரையச் சொன்னேன். சூரிய ஆற்றல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதன் அவசியம், CFL மற்றும் LED விளக்குகளின் பயன்பாடு பற்றி தங்கள் ஓவியத்தின் மூலம் விளக்கினார்கள். மற்றொரு செயல்பாடாக, ஒரு மாதத்துக்கு வீட்டில் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்திய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றேன். இந்தச் செயல்பாடு, மின் சிக்கனம் பற்றிய விழிப்பு உணர்வாக அமைந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்