கனவு ஆசிரியர் - ஊருக்கும் வழிகாட்டிய உன்னத ஆசிரியர்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
க.பூபாலன், படங்கள்: எஸ்.தேவராஜன்

‘‘ங்களுக்குப் பள்ளிப் பாடம் சொல்லிக்கொடுக்க வந்து, எங்க அப்பாக்களுக்கும் வாழ்க்கைப் பாடம் சொல்லிக்கொடுத்தவர்தான் வசந்த் சார். அவர் எங்க எல்லோருக்கும் வழிகாட்டி. வாங்க, அவர் இருக்கிற கிளாஸை நாங்க காட்டறோம்” என ஒரு சிறுவர் படையே உற்சாகமாக சூழ்ந்தது.       

கடலூர் மாவட்டம், கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்தான் வசந்த். தான் பணிபுரியும் பள்ளியை, தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி மக்களின் அன்பையும் பெற்றிருக்கிறார்.

‘‘நான் இந்தப் பள்ளிக்கு வந்தபோது கழிவறை கிடையாது, குடிநீர் வசதி கிடையாது, அழுக்கான வகுப்பறை எனப் பல அரசுப் பள்ளிகள் போலதான் இருந்தது. இதை மாற்ற வேண்டும் என தெரிந்த கல்லூரி நண்பர்கள், தெரியாத முகநூல் நண்பர்கள் எனப் பல வகையில்  நிதி திரட்டினோம். குளிர்சாதன வகுப்பறை, ஸ்மார்ட் கிளாஸ், தூய்மையான கழிவறை என மாற்றினோம். கவுன்சிலர் உதவியால் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைத்தோம்’’ என்கிறார் வசந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்