ஒரு மழை நாளில்...

கதை: விழியன், ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

ந்த நாளை மறக்கவே முடியாது. சரியாக நான்கு வருடங்கள் ஆகின்றன. அப்போது நான் சின்னப் பெண். இப்போதும் சின்னவள்தான். ஆனால், என்னை `அக்கா’ என கூப்பிட இப்போது ஒரு தம்பி இருக்கிறான்.

அந்த நாளில் நடந்தது பாதி எனக்கே நினைவில் இருக்கிறது. மீதி, அப்பாவும் அம்மாவும் சொன்னது. அப்போது வெளியான ஒரு அனிமேஷன் படத்தைப் பார்க்க வேண்டும் என அழுதேனாம். அதனால், அப்பாவின் படத்துக்கு சென்றுவிட்டு  திரும்பிக்கொண்டிருந்தோம். தம்பி அப்போது அம்மாவின் வயிற்றில் இருந்தான்.              

திடீரென மழை பிடித்துக் கொண்டு, அரை மணி நேரத்துக்கு கொட்டியது. ஒரு கடை வாசலில் ஒதுங்கி இருந்தோம்.  ‘‘நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவில் போயிடுங்க’’ என அப்பா சொன்னார்.
‘‘வேண்டாம். மழை நின்றதும் சேர்ந்தே போகலாம்’’ என அம்மா மறுத்துவிட்டார்.

மழை நின்றதும் கிளம்பினோம். தேங்கும் தண்ணீராலும் மோசமான சாலையாலும் வாகன நெரிசல் ஏற்பட்டு, அடி அடியாக நகர்ந்தோம். ஒரு கட்டத்தில் நீண்ட நேரம் நிற்கும் நிலை. இனி, ஆட்டோவும் பிடிக்க முடியாது... பின்னால் போகவும் முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்