புதிய ஆத்திசூடிக்கு புதிய செயல்பாடு!

‘புதிய ஆத்திசூடி’ பகுதிக்கு உரியது.

மாணவர்கள், புதிய ஆத்திசூடியை எளிதில் மனதில் பதிக்க  செயல்பாடு ஒன்றைச் செய்தோம்.

முதலில், புதிய ஆத்திசூடி முழுவதையும் விளக்கத்துடன் கூறினேன். பிறகு, ஒரு மாணவரை அழைத்து, அவர் காதில் ஆத்திசூடி ஒன்றைக் கூற, அவர் அதை நடித்துக்காட்ட வேண்டும். பார்க்கும் மாணவர்கள், எந்த ஆத்திசூடி எனக் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக, உடற்பயிற்சி செய்வதுபோல நடித்தால்,  `உடலினை உறுதிசெய்' எனக் கண்டுபிடித்து சொன்னார்கள். மேலும், புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற படங்களைச் சேகரித்து, அவற்றை அட்டைகளில் ஒட்டினார்கள். வேறு அட்டையில் ஆத்திசூடியை எழுதி, இரண்டையும் சரியாகப் பொருத்தும் விளையாட்டையும் செய்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்