படம் பார்த்து மயங்கொலிச் சொற்களை அறிவோம்!

‘மயங்கொலிச் சொற்கள்’ பகுதிக்கு உரியது.

மிழ்த் தேர்வில் பலருக்கும் மதிப்பெண் குறைவதற்குக் காரணம், எழுத்துப் பிழைகளோடு எழுதுவதே. சொல்லின் பொருள் புரிந்துவிட்டாலே, எழுத்துப் பிழைகள் குறைந்துவிடும். இந்தக் குறையைப் போக்கும் செயல்பாடு ஒன்றை செய்யவைத்தேன்.

ர, ற, ல, ள, ழ, ன, ண வேறுபாடுகளை அறிந்துகொள்வதற்காக, பழைய புத்தகங்களில் இருந்து சில படங்களைக் கத்தரித்து சார்ட்டில் ஒட்டவைத்தேன்.

உதாரணமாக: அரை என்கிற சொல்லுக்கு, சரிபாதியாக வெட்டிய ஆரஞ்சுப் பழத்தின் பாகங்களையும், அறை என்கிற சொல்லுக்கு, வீட்டின் ஒரு பகுதியையும் ஒட்டச் செய்தேன்.

படங்களோடு அந்தச் சொல்லைப் பார்க்கும்போது, அர்த்தத்தை எளிதில் புரிந்துகொண்டார்கள். மிக எளிமையாக மயங்கொலிச் சொற்களை மனதில் பதித்துக்கொண்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்