‘‘எங்கள் பள்ளி... எங்கள் வயல்!''

விவசாயம் அறிவோம்

‘‘இந்த ஸ்கூல்ல எனக்காகவே ஒரு வேப்பமரம் இருக்கு. தினமும் அதுக்கு தண்ணீர் ஊற்றுவேன். லன்ச் பிரேக்ல தோழிகளோடு அந்த மரத்தடியில உட்கார்ந்து சாப்பிடுவேன்'' என உற்சாகமாகச் சொல்கிறார் தேசிகா.

திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள பாலஅருணாசலபுரம் பகுதியில் உள்ளது, சாதனா வித்யாலயா பள்ளி. மண்வெட்டி, கூடை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பள்ளிக் கட்டடத்துக்குப் பின்னால் துள்ளலுடன் சென்றுகொண்டிருந்தார்கள் மாணவர்கள்.

அங்கே, ஒரு ஏக்கர் வயல்பரப்பில் கீரை மற்றும் காய்கறிச் செடிகள் பசுமையுடன் சிரித்தன. ‘‘இவை எல்லாம் நாங்களே உருவாக்கியவை. நாங்களே விதை விதைச்சு, இயற்கை உரம் தயாரிச்சுக்கிட்டு, களை பிடுங்கி, தண்ணீர் ஊற்றி உருவாக்கியவை. அவரை, வெண்டை, வெங்காயம், கிழங்கு வகைகள், கீரை வகைகள் என நாங்க விளைவிச்ச உணவுப் பொருட்களை, இங்கேயே விற்போம். கொஞ்ச நேரம் இருங்க, வேலையை முடிச்சுட்டு வர்றோம்'' என்றார், மனோஜ்குமார் என்ற மாணவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்