புக் கிளப்

ஜானி ஜானி
எஸ் பாப்பா
ஈட்டிங் சுகர்
நோ பாப்பா


ந்த வரிகளைப் படிக்கும்போதே, ராகம் போட்டு பாடியவாறு உங்கள் கைகளும் கால்களும் நடனமாட ஆரம்பித்துவிட்டதா? அந்த அளவுக்கு மனதோடு ஒன்றிவிட்ட இந்தப் பாடல்போல, தமிழில் அபூர்வமாகவே வெளியாகும். அந்தக் குறையைத் தீர்க்க வந்துள்ளது, செந்தில்பாலா எழுதிய `இங்கா' சிறார் பாடல்கள் புத்தகம்.

முதல் பாடலே மழையை வரவேற்கும் அருமையான பாடல். நெல், குருவி, கூட்டாஞ்சோறு, நொண்டியாட்டம், கொக்கு, கண்ணாமூச்சி என ஒவ்வொரு பாடலும், படிக்கும்போதே எழுந்து நடனமாட தூண்டுகிறது.

சில பாடல்களைப் பாடும்போது உங்களால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. அவ்வளவு நகைச்சுவையாக இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்கும் ஐந்து வரி பாடலும் உண்டு. சுகமாக தூங்கவைக்கும் பெரிய தாலாட்டுப் பாடலும் உண்டு.

கணக்குப் பாடல், விளையாட்டுப் பாடல் என விதவிதமாக எழுதியிருக்கிறார் செந்தில் பாலா. ஒவ்வொரு பாடலுக்கும் ஓவியர் இரா.அன்பழகன், அழகான ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க ஆரம்பித்தால்,  பக்கத்து வீட்டில் இருந்து எட்டிப் பார்ப்பார்கள்.  ஏனென்றால், இதை நீங்கள் படிக்க மாட்டீங்கள்; ராகம் போட்டு பாடுவீர்கள். நண்பர்களோடு நடக்கும் பாட்டுப் போட்டிகளில், இந்தப் பாடல்களையே பாடி அசத்தலாம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்