மயக்கும் எழுத்து மந்திரவாதி!

செப்டம்பர் 13 ரோல் தால் பிறந்த தினம்

துப்பாக்கியைப்  பிடித்து, ‘டுமீல் டுமீல் டுமீல்' என சண்டை போட்டுக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரர், பேனாவைக் கையில் எடுத்தார். உலகம் முழுவதும் உள்ள சுட்டிகளின் உள்ளங்களை சுட்டுத் தள்ளினார். அவர்தான், ரோல் தால்.

மிகச் சமீபத்தில், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியாகி, சக்கைப்போடு போட்ட ‘தி பிஎஃப்ஜி' (The BFG) படத்தின் கதைக்குச் சொந்தக்காரர். மாயாஜால கதைகள் என்றால், பயமுறுத்தும் விஷயம் என்பதை மாற்றி, கலகலப்பான கதைகளால் தனியிடம் பிடித்தவர். ரோல் தாலின் கதைகள் போலவே அவரது வாழ்க்கையும் ரொம்பவே த்ரில்லிங்கானது.

செப்டம்பர் 13, 1916-ம் ஆண்டு, லண்டனின் சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பிறந்தவர், ரோல் தால். மூன்று வயதிலேயே தந்தையை இழந்தவர். ‘பையன் பொறுப்பாக வளர வேண்டும்' என அவருடைய அம்மா, மிக கண்டிப்பான ஒரு பிரிட்டிஷ் பள்ளியில் சேர்த்துவிட்டார். ‘உலகத்திலேயே அதிக கஷ்டங்களைக் கொடுக்கும் இடம் ஸ்கூல்தான்' என்று சொல்வார் ரோல் தால். விளையாட்டில் படு சுட்டியான ரோல் தால், படிப்பில் சுமார்தான். அதனால், ஹெட்மாஸ்டரிடம் ஏகப்பட்ட பிரம்படிகள் வாங்குவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்