சுட்டி ஸ்டார் நியூஸ்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தெனாலி 2016

தெனாலிராமனும் மன்னன் கிருஷ்ணதேவராயரும் இப்போது இருந்தால்..?

மன்னர்: “தெனாலி, புது சட்டை சூப்பரா இருக்கே!''

தெனாலி: “நன்றி மன்னா, கொஞ்சம் பக்கத்தில் நின்றால், செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்ல போட்டுப்பேன். எத்தனை லைக்ஸ் வருதுனு பார்க்கலாம்.''

மன்னர்: “எனக்கும் ஆன்லைனில் ஒரு  வீர வாள் ஆர்டர் பண்ணணும்.''

தெனாலி: “மன்னா, பக்கத்து நாட்டுல 4G நெட்வொர்க் கிடைக்குதாம். ஆனா, இங்கே       3G-க்கே திணறுது.''

மன்னர்: “அவ்வளவுதானே... பக்கத்து நாட்டு மன்னன் என்னோட ஃபேஸ்புக் ஃப்ரெண்டுதான். இன்பாக்ஸ்ல சாட் பண்ணி, 4G-க்கு என்ன பண்றதுனு கேட்டுடறேன். யாரங்கே...?''

காவலாளி: “வந்தேன் மன்னா. இந்தாங்க லேப்டாப்.''

மன்னர்: “நமது காவலாளிகள்  புத்திசாலிகள். ‘மெயில் என்றால், வாட்ஸ்அப்'பாக வந்து நிற்பவர்கள்.''

தெனாலி: “இந்தச் சந்தோஷத்திலேயே, அரண்மனையில் wi-fi கனெக்‌ஷன் கொடுத்து, எங்க சம்பளத்தையும் அதிகமாக்கினால் நன்றாக இருக்கும் மன்னா!''

மன்னர்: “ஹா... ஹா... லைக் யூ... லைக் யூ.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்