வெள்ளி நாயகி வெற்றி தேவதை!

கிரிக்கெட் வெற்றிகளை மட்டுமே பெரியதாக கொண்டாடும் இந்திய ரசிகர்களை பேட்மின்டன் பக்கம் திருப்பி இருக்கிறார், பி.வி.சிந்து. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் மகளிர் பேட்மின்டன் இறுதிப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்று வெற்றி தேவதையாக வலம்வருகிறார்.

ஒலிம்பிக்... வீரருக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு ரசிகருக்கும் மிகப் பெரிய கனவு. ஒரு தேசத்தின் கனவு. அத்தனை பேரின் கனவையும் ஒரு வீரர் மைதானத்துக்கு சுமந்துச் செல்கிறார். கடுமையான உழைப்பு, பல்வேறு தியாகங்கள், முழுமையான அர்ப்பணிப்புடன் அந்தக் கனவை நிறைவேற்றும்போது, மெகா கொண்டாட்டமாக மாறுகிறது. அப்படி ஒரு கொண்டாட்டத்தை அளித்திருக்கிறார் இந்த வெள்ளி நாயகி.

சிந்து, 1995-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி, ஹைதராபாத்தில் பிறந்தார். பெற்றோரான ரமணா, விஜயா இருவரும் வாலிபால் வீரர்கள். சிந்துவின் தந்தை, அர்ஜுனா விருது வாங்கியவர். 8 வயதில் செகந்திராபாத்தில் உள்ள ரயில்வே பயிற்சி மையத்தில் சேர்ந்தார் சிந்து. இவரது அதிரடி ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர் கோபி சந்த், தன் அகாடமியில் சேர்த்துக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்