மாரியப்பன் - உத்வேகம் அளித்த தங்க மகன்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ‘பாரா ஒலிம்பிக்’ போட்டியின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு.

இன்று நாடே மகிழ்வோடு கொண்டாடும் மாரியப்பனின் இளமைக் காலம் வலி நிறைந்தது. சேலம் மாவட்டம், பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பனின் வயது 21. உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அம்மா சரோஜா, காய்கறி வியாபாரம் செய்பவர். மாரியப்பனுக்கு ஐந்து வயது இருக்கும்போது, பள்ளிக்குச் செல்லும் வழியில் பஸ் மோதியதில், வலது முழுங்காலுக்கு கீழே முற்றிலும் நசுங்கிவிட்டது. ஆனாலும், மாரியப்பன் சோர்ந்துவிடவில்லை.

மாரியப்பனுக்கு விளையாட்டின் மீது ஆர்வம். உயரம் தாண்டுதல் வீரனுக்குரிய திறமை அவரிடம் இருப்பதை உணர்ந்த  உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், பயிற்சி அளித்தார். தனது 14 வயதில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் மாரியப்பன் இரண்டாவது இடம் பிடித்தார். பள்ளி நிர்வாகம் மற்றும் அந்தப் பகுதியினர் மாரியப்பனுக்கு பெரும் ஆதரவு அளித்தனர். உற்சாகத்துடன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். பெங்களூரில் பயிற்சியாளர் சத்யநாராயணா தீவிரப் பயிற்சி அளித்தார்.

2012-ம் ஆண்டே லண்டனில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு மாரியப்பன் தகுதி பெற்றிருந்தார். விசா பிரச்னையால் செல்ல முடியவில்லை. ‘இந்த முறை தங்கத்தோடு திரும்புவேன்’ என்று சொன்னவர், உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் தாண்டி, தங்கப் பதக்கம் வென்றார்.

பலருக்கும் உத்வேகத்தை அளித்திருக் கிறார் இந்த தங்க மகன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்