குழியில் விழுந்த குட்டி யானை!

வேணு சீனிவாசன், ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

‘‘அம்மா, தைலாவை எனக்குக் கொஞ்சம் வள்ளிக்கிழங்கு கொடுக்கச் சொல்லும்மா...’’

அம்மாவின் புடவைத் தலைப்பை பிடித்து இழுத்துச் சொன்னான் மாணிக்கம்.

அவர்கள் ஒற்றையடிப் பாதையில் சென்றுகொண்டிருந்தார்கள். அம்மாவின் தலையில் விறகுக்கட்டு, ராத்திரி சமையலுக்கு வேண்டிய பொருட்கள். ஒரு கையில் மண்ணெண்ணெய் சீசாவும் இன்னொரு கையில் வள்ளிக்கிழங்குமாக தைலா.

தைலா எட்டாம் வகுப்பும், மாணிக்கம் ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். மலைக்கு மேலே வசிக்கிறார்கள். அப்பா இல்லை. அம்மாவுக்குத் தேயிலைத் தோட்டத்தில் வேலை.

‘‘மாணிக்கம், அதோ பாருடா தேன்சிட்டு’’ என்றாள் தைலா.

அந்தரத்தில் நின்றபடி, பெரிய பூ ஒன்றில் இருந்து நீண்ட அலகால் தேன் குடித்துக்கொண்டிருந்தது அந்தத் தேன் சிட்டு.  காற்றில் சிறகுகளை அசைப்பது பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

ஒரு நொடிதான், சட்டென தைலா பக்கம் திரும்பிய மாணிக்கம், ‘‘நீ பேச்சை மாத்தாதே.வள்ளிக்கிழங்கை கொடு’’ என்றான்.

‘‘சும்மா விளையாடினேன். இந்தா’’ என்று கொடுத்தாள் தைலா.

மூவரும் மலைப்பாதையில் நடந்தார்கள். அடர்த்தியான மரங்கள், விதம்விதமான பூக்கள், மனதை மயக்கும் ஒருவித வாசனை என அந்தப் பாதை முழுவதும் ரம்மியமாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசைகள் தெரிய ஆரம்பித்தன. அவர்கள் ஒரு குடிசையை அடைந்தனர். தைலாவும் மாணிக்கமும் விளையாட ஆரம்பித்தனர். இரவு சாப்பாட்டு முடித்து படுத்துக்கொண்டார்கள்.

அன்று பள்ளியில் தன் நண்பனோடு நடந்த ஒரு சண்டையைப் பற்றி பெரிய கதையாக சொல்ல ஆரம்பித்தான் மாணிக்கம். சற்று நேரத்தில் உறங்கிவிட்டார்கள்.

நடுநிசி நேரம். கூரை மீது சத்தம் கேட்டு, அம்மா விழித்துக்கொண்டார். கதவுக்கு அருகே பெருமூச்சு. அம்மாவுக்குப் புரிந்துவிட்டது. மாணிக்கத்தையும் தைலாவையும் தட்டி எழுப்பினார்.

‘‘உஷ்... சத்தம் போடாம எந்திரிங்க. யானை வந்திருக்கு. கூரையை இழுக்குது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்