வெற்றியால் பேசும் நம்பிக்கை நாயகி!

சாதனை படைக்க எதுவுமே தடையில்லை. தன்னம்பிக்கை மட்டும் போதும். அதைதான் நிரூபித்திருக்கிறார் மதுரை மாணவி, ஜெர்லின். `ஸ்கூல் கேம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா' (SGFI) நடத்திய பள்ளிகள் இடையேயான பேட்மின்டன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று வந்திருக்கிறார்.

தேசிய அளவில் பள்ளி மாணவர் களுக்காக நடக்கும் போட்டி இது. இதில், தமிழகத்தில் இருந்து இதுவரை வெண்கலப் பதக்கம் வாங்கியது மட்டும்தான் சாதனையாக இருந்தது. அதை, பிரேக் செய்து வெள்ளியோடு வந்திருக்கிறார் ஜெர்லின். `இதுல என்ன சாதனை இருக்கு... ஸ்கூல் லெவல் போட்டிதானே?' என்று நினைக்கலாம். ஜெர்லினுக்கு காது கேட்காது; பேசவும் முடியாது.

இப்போ சொல்லுங்க... ஜெர்லின் செய்திருப்பது எப்படிப்பட்ட சாதனை?

மதுரை, புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார், ஜெர்லின் அனிகா. பிறந்ததில் இருந்தே காது கேளாத, வாய் பேச முடியாதவர். ஆனால், பேட்மின்டனில் இவரது ராக்கெட், மின்னல் வேகத்தில் பேசுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்