சிலம்பம் சுற்றும் சிட்டி கேர்ள்!

ட்டில், டென்னிஸ், ஸ்கேட்டிங், ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளிலேயே நகரத்துக் குழந்தைகள் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில், நமது பாரம்பர்யத் தற்காப்புக் கலையும் கிராமத்து வீர விளையாட்டுமான  சிலம்பத்தில் சீறிப்பாய்கிறர் ஓவியா.

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி, ஓவியா. ஆசிய அளவிலான சிலம்பப் போட்டியில் சாம்பியன்ஷிப் வென்று திரும்பியவரை சந்தித்தேன்.

‘‘முதலில், பேட்மின்டனில்தான் சேர்ந்திருந்தேன்.  தினமும் கிளாஸுக்குப் போகும்போது, அருகில் இருந்த சிலம்பம் வகுப்பில், பாண்டியன் மாஸ்டர் சிலம்பம் கற்றுத் தருவதைப் பார்ப்பேன். எனக்கும் ஆர்வம்  வந்துச்சு. அம்மா, அப்பாவிடம் சொன்னபோது, ‘உனக்கு எது பிடிக்குதோ அதைச் செய்’னு உற்சாகப்படுத்தினாங்க. அப்போது, மூன்றாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்தேன். ஆரம்பத்தில் சிலம்பப் பயிற்சி, கஷ்டமா இருந்துச்சு. ஆனாலும், ஆர்வமாகக் கற்றதால் சோர்வாக தெரியலை. சிலம்பம் தற்காப்புக் கலை மட்டுமல்ல, உடலை உறுதிசெய்யும் சிறந்த உடற்பயிற்சியும்கூட. இது, நம் தன்னம்பிக்கையை வளர்க்கும். மனதை ரிலாக்ஸ் செய்து, நினைவாற்றலை அதிகரிக்கும். சிலம்பம் கற்க ஆரம்பிச்சதில் இருந்து. பாடங்களையும் நன்கு உள்வாங்கி படிக்கிறேன்’’ என்கிற ஓவியா, சிலம்பப் போட்டிகளில் பெற்றுள்ள வெற்றிகளும் படைத்துள்ள சாதனைகளும் பல பல

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்