யோகா என் நேசம்!

‘‘அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ், கார்ட்டூன்ஸ் வரிசையில் நான் ரொம்ப நேசிக்கிற விஷயம், யோகா. அதுல ஆசிய அளவில் ஜெயிச்சதை நினைச்சு பெருமையா இருக்கு’’ எனச் சிரிக்கிறார் முருகானந்தம்.

பழனி, தேவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் முருகானந்தம், மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகாசன போட்டிகளில் முதல் இடம் பிடித்திருக்கிறார்.

‘‘என் அப்பா மரக்கடை நடத்தறார். நான் மூணாவது படிக்கிறப்பவே யோகா கத்துக்க ஆரம்பிச்சேன். பல போட்டிகளில் பரிசு வாங்கி இருக்கேன். நான் வாங்கின பரிசுகளை ஸ்கூலில் காட்டுவேன். பிரேயரில் வெச்சு என்கரேஜ் பண்ணுவாங்க. ஒரு கட்டத்துல, ‘நம்ம ஸ்கூலிலும் யோகா கிளாஸை ஆரம்பிக்கலாம்’னு சொன்னாங்க. அதுவே, எனக்குக் கிடைச்ச வெற்றியா நினைக்கிறேன்’’ என்கிற முருகானந்தம் முகத்தில் பெருமிதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்