அழிய விடல் ஆகாது பாப்பா! - பாண்டிச்சேரி சுறா

ஆயிஷா இரா.நடராசன்

அன்புள்ள நண்பர்களே,

நலமா..?

ங்கே, நாங்கள் நலமாக இல்லை என்பதைத் தெரியப்படுத்தவே இந்தக் கடிதம்.

சுறாக்கள் பற்றி அச்சமூட்டும் திரைப்படங்கள் உண்டு. சுறாப் புட்டு, சுறா சாண்ட்விட்ச், சுறா ஹாம் பர்கர் என உணவு விடுதியின் ருசி வேட்டை ஒரு புறம். மனிதர்களின் சுறா - இன வேட்டை எனும் சாகச விளையாட்டு மறுபுறம். இதுவே எங்கள் அழிவுப்படலம். கேட்க யாருமில்லை தோழா.

பெரும்பாலான சுறாக்கள் கடலில்தான் வாழ்கின்றன. ஆனால், பாண்டிச்சேரி சுறா என்று பெயர்பெற்ற நாங்கள், கடலிலும் ஆற்று நீரான நன்னீரிலும் வாழ சிறப்புப் பிறப்பு எடுத்தவர்கள். எனவே, மீன் இனத்தின் அபூர்வ உடல்வாகு எங்களுக்கு உண்டு. நீண்ட மூக்கு சுறா என்று இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் எங்களை அழைப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick