ஸ்மர்ஃப்... கிராமத்தைத் தேடி..!

ஜான்சன்

ப்ரல் 21-ம் தேதி வெளியாக பரபரவெனத் தயாராகிக் கொண்டிருக்கிறது ஸ்மர்ஃப்ஸ். நாவலாகவும், திரைப்படமாக இதற்கு முன் வெளியான இரண்டு பாகங்கள் மூலமாகவும் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்மர்ஃப்களுக்குப் பல ரசிகர்கள் உண்டு. முந்தைய பாகங்களைப் போலவே இந்த பாகத்திலும் அசத்தலான விஷுவல்களோடு தயாராகியிருக்கிறது படம். இந்த பாகத்தில், ஸ்மர்ஃப் கூட்டத்தில் இருக்கும் பெண் ஸ்மர்ஃபான ஸ்மர்ஃபிட்டி தன்னைப் போன்ற இன்னொரு பெண் ஸ்மர்ஃபை பார்க்கிறாள். கூடவே ஒரு மேப் கிடைக்க, தன் நண்பர்களான ப்ரைனி, க்ளம்ஸி மற்றும் ஹெஃப்டி ஆகியோருடன் அந்த மேப்பைப் பின்பற்றி தொலைந்து போன ஸ்மர்ஃப் கிராமத்தைத் தேடி பயணிக்கிறார்கள். அவர்கள் அந்த கிராமத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள், மந்திரவாதி கேர்கேமலால் என்ன பாதிப்பு ஏற்பட்டது, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஸ்மர்ஃப்களின் ரகசியம் என்ன? போன்ற விஷயங்களைப் பற்றிக் கூற இருக்கிறது ‘ஸ்மர்ஃப்ஸ்: த லாஸ்ட் வில்லேஜ்'. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick