சிரிப்பூர்

ஹரீஷ் - அசோக்

முன்னொரு காலத்தில், ‘மந்தம்’ என்றொரு ஊர் இருந்தது. அந்த ஊரில் யாரும் சிரிக்க மாட்டார்கள்.

குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கும் எப்படிச் சிரிப்பதென்றே தெரியாது.

குழந்தைகள், எந்நேரமும் படித்துக்கொண்டே இருந்தார்கள். பள்ளியில் படித்தார்கள். வீடு திரும்பிய பின்னரும் வீட்டுப் பாடம் செய்தார்கள். மாதப் பரீட்சை, கால் பரீட்சை, அரை பரீட்சை, முழுப் பரீட்சை என்று பரீட்சைக்காகப் படிப்பதே அவர்களின் முழுநேர வேலையாக இருந்தது. படித்த விஷயத்தை எந்தக் குழந்தையும் தங்களிடையே பகிர்ந்து  கொள்வதே இல்லை. ‘தன்னைவிட இன்னொரு குழந்தை அதிக மதிப்பெண்கள் பெற்றுவிட்டால்...’ என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதிக மதிப்பெண்கள் பெறுவதே அனைத்து குழந்தைகளின் ஒரே நோக்கமாக இருந்தது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick