அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான் | Sambar Deer - Chutti Vikatan | சுட்டி விகடன்

அழிய விடல் ஆகாது பாப்பா! - கடமான்

ஆயிஷா - இரா.நடராசன்

அன்பு நண்பர்களே,

நான்தான் கடமான் எழுதுகிறேன். என்னை  இரட்டைக் கொம்பன் என்றும் அழைப்பார்கள்.  ஆங்கிலத்தில் சாம்பர் டீர் (Sambar Deer) என்று பெயர். பல்வேறு காரணங்களால் இனி, புவியில் மிச்சமின்றி அழியப் போகிறோம் என்கிற அச்சத்தில் எழுதுகிறேன். நீங்கள்தான் எங்கள் இனத்தைக் காப்பாற்ற வேண்டும்.

தெற்கு ஆசியா கண்டத்தின் அடையாளங்கள் பல. அதில் நாங்களும் உண்டு. இமயமலை முதல் தெற்கு பர்மா, தாய்லாந்து வரை ஒரு காலத்தில் பெருங்கூட்டமாக நாங்கள் வாழ்ந்தோம். மலாய்த் தீவுகள், தென் சீனம், தைவான் இங்கெல்லாம் நாங்களே தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டோம். மழைக்காடுகளின் அடர்ந்த பிரதேசங்களின் நீர் நிலைக்கு அருகிலேயே கூட்டமாக வசித்தோம்.

கிடா வகை (ஆண்) மான்களுக்கு முன்னந்தலையின் இரண்டு புறமும் நீண்டு கிளை விட்ட கொம்பும் கூடவே வளரும் சிறு கொம்புமாக இரட்டைக் கொம்புகள் எங்கள் தனி அடையாளம். உடல் முழுக்க ஒரே நிறத்தில் (சாம்பல்) பளபளக்கும் மான்கள் இனம், உலகிலேயே நாங்கள்தான். முதுமலை, பழனிமலைப் பகுதியில் மட்டுமே, ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் சுற்றியவர்கள் ஏழு, எட்டு என சரணாலயங்களில் காட்சிப் பொருளாகி விட்டோம்... நண்பா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick