தோல்வியில் பிறந்த நம்பிக்கை!

பு.விவேக் ஆனந்த்

ந்திய மகளிர் அணி, உலகக்கோப்பையில் ரன்னர் அப் ஆகியிருக்கிறது. இது மகத்தான சாதனை. தோற்றதில் என்ன சாதனை இருக்கிறது என்று கேட்கலாம்... ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என யாராவது சொல்லியிருந்தால் பலரும் நம்பியிருக்கமாட்டார்கள். ஏனெனில், இந்திய அணி அப்போது உலகக் கோப்பை விளையாடுவதற்கு நேரடியாகத் தகுதிபெறவில்லை. நம் மகளிர் அணிக்கு ரோஜா இதழ்கள் தூவிய பாதை கிடைக்கவில்லை. முட்கள் நிறைந்த, கடும் போராட்டங்கள் நிறைந்த பாதையில் பயணித்துதான் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick