சுதந்திரம் 71

ஆதலையூர் த.சூர்யகுமார்

1.பணக்காரன்

இந்தியாவின் செல்வச் செழிப்புமீது ஐரோப்பியர்களுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்துவந்தது. எப்படியாவது இந்தியாவுக்குப் போய் வியாபாரம் செய்து, ‘அம்பானி’யாகிவிட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருந்தது. போர்ச்சுக்கீசிய மாலுமி, 1498-ல் அதற்கு ரூட் போட்டுக் (கடல் வழி) கொடுத்தார். உடனே அடித்துப்பிடித்து இந்தியாவுக்கு வந்து கடைவிரித்துவிட்டார்கள்.

2.லக்கிமேன்

கம்பெனி ஆரம்பித்து முதலாளி ஆக வேண்டும் என்ற கனவில் வந்தவர்களுக்கு, இந்தியாவில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய மன்னர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். சண்டையை சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு, உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டு, தங்களின் நாடு பிடிக்கும் ஆட்டத்தைத் தொடங்கினார்கள் ஐரோப்பியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick