வாகா எல்லையில் டோரா!

பரிசல் கிருஷ்ணா, கே.ராஜசேகரன்

ஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலிருந்து அரை மணி நேரப் பயண தூரத்தில் இருக்கிறது வாகா. அங்கு, இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில், தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்கள் சீருடையில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தனர்.

இந்தியச் சகோதரத்துவத்தைப் பறைசாற்றக்கூடிய விழாக்களில் ஒன்றான `ரக்‌ஷாபந்தன்’ அந்த இடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சேனலான ‘நிக்கலோடியன்’ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ‘சுரக்‌ஷாபந்தன்’ என்ற பெயரிடப்பட்டு,  தங்கள் குடும்பத்தினரோடு ரக்‌ஷாபந்தன் கொண்டாட முடியாத நிலையில் இருக்கும் வீரர்களுக்காக அங்கே கூடினர் குழந்தைகள். குழந்தைகள் மட்டும் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த கூட்டத்துக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick