குமாரியும் மாரியும்! | Short Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

குமாரியும் மாரியும்!

ஓவியம்: அஷோக்

குமாரி இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தாள். ஏன்னா, அவள் அப்பா ரெண்டு ஆட்டுக் குட்டிகளை வாங்கிட்டு வந்திருந்தார். ஒண்ணு முழுக்க கறுப்பாகவும், இன்னொண்ணு ஆங்காங்கே கொஞ்சம் வெள்ளையாவும் இருந்துச்சு.

‘‘ஏதுப்பா இது?’’ எனக் கேட்டாள்.

‘‘பக்கத்து ஊருல இருக்கிற என் சிநேகிதனைப் பார்க்கப் போயிருந்தேன். அவன்கிட்டே நிறைய ஆடுகள் இருக்கு. அதுல ஒரு ஆடு போட்ட குட்டிகள். நீ ஆட்டுக்குட்டி வளர்க்கணும்னு கேட்டில்லே, அவன்கிட்டே சொன்னதும், ‘இந்தா சும்மாவே எடுத்துட்டுப் போ’னு தூக்கிக் கொடுத்துட்டான். ஒண்ணு போதும்னு சொன்னதுக்கு, ‘தனியா இருந்தா கஷ்டப்படும். ஜோடியா இருக்கட்டும்’னு சொன்னான்’’ என்றார் அப்பா.

‘‘ரெண்டையும் நான் கவனிச்சுக்கிறேன்ப்பா. இதுக்கு நான்தான் பேர் வைப்பேன். ரோஸி, ஜிம்ஸி... பேர் நல்லா இருக்கா?’’ எனக் குஷியுடன் கேட்டாள் குமாரி.

அப்பா சிரிப்புடன், ‘‘குமாரி, ரெண்டுமே கிடாக்குட்டிங்க’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick