பசுமை நண்பன் கற்றுத்தரும் பாடம்! | FA Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்

பசுமை நண்பன் கற்றுத்தரும் பாடம்!

பொதுவானது

விதையிலிருந்து பெரிய மரமாவது பற்றி விளக்கிக் கூறினேன். இதற்கு உரிய செயல்பாடு என்ன செய்யலாம் என்பதை நீங்களே யோசித்து வாருங்கள் என்றேன். மறுநாள், மாணவர்கள் விதவிதமான செயல்பாடுகளைக் கூறினர். அவற்றில் ஒரு மாணவன் சொன்னது சுவாரஸ்யமானது. மாணவர்களுக்கு தலா ஒரு விதையைக் கொடுப்பது. அதற்கு அந்த மாணவர், தம் நெருங்கிய நண்பரின் பெயரைச் சூட்ட வேண்டும். அந்த விதையை நமது பள்ளியில் ஏதேனும் ஓர் இடத்தில் விதைக்க வேண்டும். தினமும் நண்பரோடு சாக்லேட், லன்ச் போன்றவற்றை ஷேர் பண்ணுவதைப் போல விதை நண்பனுக்கு தினந்தோறும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். ஒரு மாதம் கழித்து, ஆசிரியர், யார் சிறப்பாக வளர்த்திருக்கிறார் எனப் பார்த்து மதிப்பீடு அளிக்க வேண்டும். இந்த யோசனையைக் கூறிய மாணவனைப் பாராட்டி, உடனடியாகச் செயல்முறைப் படுத்தினோம். அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். உங்கள் பள்ளியிலும் இந்த முறையைப் பின்பற்றலாமே!   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick